IT JOBS: சென்னை + பெங்களூரில் ஐடி வேலை ரெடி.. அறிவிப்பு வெளியிட்ட TCS.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சென்னை மற்றும் பெங்களூரில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த ணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு இண்டர்வியூவில் பங்கேற்று வேலையை பெறலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது Devops Engineer (Java + AWS) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.
என்னென்ன தகுதி வேண்டும்?
Must Have Skills ஆக சில நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஜாவா (கோர் மற்றும் அட்வான்ஸ்ட்), ஸ்பிரிங்புட் (REST APis, Security, Data), யூனிட் மற்றும் இன்டிகிரேஷன் டெஸ்ட்டிங்கில் (JUnit, Mockito) தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பில்ட் டூல்ஸ்ஸில் Maven/Gradle, Version Control-லில் Git, CI/CDயில் Jenkins, GitHub Actionsயில் Code Quality Checkers தெரிந்திருக்க வேண்டும்.
சர்ட்டிபிகேட்
ஏடபிள்யூஎஸ்-ஸில் விபிசி, இசிஎஸ், எ3, லேம்டா, டைனமோ டிபி, கேஎம்எஸ், சீக்ரெட்ஸ் மேனேஜர், சிடிகே, டேட்டாபேசில் ரிலேஷனல் (postgreSQL), NoSQL (டைனமோடிபி), டாக்கரில் (Containerization), SSL/TLS சர்ட்டிபிகேட்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.
7 ஆண்டு அனுபவம்
அதேபோல் ஏடபிள்யூஎஸ் அட்வான்ஸ்ட் சர்வீசில் என்என்எஸ்/எஸ்க்யூஎஸ், ஸ்டெப் ஃபங்ஷன்ஸ், ஏபிஐ கேட்வே, சீக்ரெட் மேனேஜர், பாராமீட்டர் ஸ்டோர் உள்ளிட்டவை தெரிந்திருக்கவேண்டும். இதுதவிர கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
கடைசி தேதி - சம்பளம் என்ன?
தற்பாதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம்.
சென்னை - பெங்களூரில் நியமனம்
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் குறித்து அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications