IT Jobs: சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான வேலை.. செப்டம்பர் 19ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வரும் 19ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.

it-jobs-tcs-hiring-for-informatica-administrator-on-september-in-chennai

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Informatica Administrator பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.

அதன்படி விண்ணப்பம் செய்வோர் பிளஸ் 2 + டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டாயமாக 50 சதவீதத்துக்கு மேலாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இன்பர்மேடிக் பவர் சென்டர் (Informatica Power Centre), ஐடிக்யூ, ஐஐசிஎஸ், எம்டிஎம், சிடிஐபிசி அட்மினிஸ்டர் என்விரான்மென்ட் தெரிந்திருக்க வேண்டும்.

இன்பர்மேட்டிக் சர்வீசஸ், ரிபோஷிடோரரிஸ், நோட்ஸ் உள்ளிட்டவற்றில் ஸ்டார்ட்/ஸ்டாப் தெரிந்திருக்க வேண்டும். கோட் டெப்ளாயின்மெண்ட் தெரிந்திருக்க வேண்டும். எல்2 இன்சிடென்ஸ்ட், சர்வீஸ் ரெக்வெஸ்ட், அலர்ட் உள்ளிட்டவற்றில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் லினக்ஸ்/யுனிக்ஸ் சிஸ்டம் பற்றிய புரிதல், பேசிக் எஸ்க்யூஎல் டிரபிள்சூட்டிங், ஐடிஎஸ்எம் டூல்ஸ் (சர்வீஸ் நவ், ரெமிடி) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 19 ம் தேதிகாலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் Gate -4, TCS Siruseri Campus, Plot No.1, G-1, SIPCOT Information Technology Park Near Siruseri Special Economic Zone (SEZ), Siruseri, Chennai - 603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

இண்டர்வியூவுக்கு செல்லும்போது 2 ரெஸ்யூம், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரசு அடையாள அட்டை 2 ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+