IT JOBS: TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அதுவும் சென்னையில்.. வந்தாச்சு சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்). நம் நட்டின் பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜாவா ஃபுல்ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் ஜாவா ஃபுல் ஸ்டாக்(ஜாவா 8, ஜாவா ஸ்கிரிப்ட், எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், Hibernate, RestAPI) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ஜாவா 8, ஸ்பிரிங் புட் உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருகக வேண்டும். மாடர் ஜாவா ஸ்பிகிரிப்ட் ஃபிரேம்வொர்க்கான Angular 5, Vue.JS, React, HTML 5, CSS 3/4, JavaScript ES6/ES7 உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அஅதுமட்டுமின்றி PostgreSQL அல்லது Oracle-லில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். JPA/Hibernate அனுபவம் இருக்க வேண்டும். REST API பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். GIT அல்லது ஏதாவது சப் வெர்ஷனிங் டூல்லான எஸ்விஎன், சிவிஎஸ்-யில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Agile/Scrum working methodolog தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் இந்த பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் கூறப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கான நேரம், இடம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications