IT Jobs: சென்னை - பெங்களூரில் ஐடி வேலை ரெடி.. அழைக்கும் டிசிஎஸ் ஐடி நிறுவனம்
சென்னை: சென்னை மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனமாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறதுது. இந்நிலையில் தான் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Java Spring Boot Microservices பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:

என்னென்ன தகுதிகள் வேண்டும்?
தற்போதைய அறிவிப்பின்படி விண்ணப்பம் செய்வோருக்கு RESTful APIs, JAX-RS, JSON பயன்படுத்தி பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சோ்ஸ் கோட் மேனேஜ்மென்ட்டை பயன்படுத்தி SVN அல்லது GIT மற்றும் பில்ட் டூல்ஸ் ant, maven, gradle தெரிந்திருக்க வேண்டும்.
ஜே2இஇ டூ ஸ்பிரிங்புட்
Maven Build Scrips /Curie moving to GI Hub தெரிந்திருக்க வேண்டும். J2EE, Spring, Spring Boot, SQL, Hibernate, JPA Framework உள்ளிட்டவை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் Must Skils ஆக வகைப்படுத்தப்பட்டள்ளது. இதுதவிர ஆரக்கள்/postgres பற்றி நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் எவ்வளவு?
ஜென்கின்ஸ் ஸ்கிரப்ட்ஸ், சிஐசிடி டெப்ளாய்மென்ட்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். லோட் பேலன்சிங் டெக்னாலஜி மற்றும் வெப் சர்வர்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ச்சர் உள்ளிட்டவையும் தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பணி நியமனம் எங்கே?
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை/பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட உள்ளனர்
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications