IT Jobs: TCS ஐடி வேலைவாய்ப்பு.. நவம்பர் 29 ல் சென்னையில் இண்டர்வியூ.. ரெடியா?
சென்னை: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் நவம்பர் 29 ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. இதன்மூலம் பைத்தான் டெவலப்பர் (Python Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது டாடா குழுமத்தை சேர்ந்தது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Weekend Walk In Drive அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பைத்தான் டெவலப்பர் (Python Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோரக்கு FastAPI அல்லது Spring Boot உள்ளிட்டவற்றை பயன்படுத்தி டிசைன், டெவலப் மற்றும் மெயின்டெயின் சர்வீசஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஃப்ரண்ட்எண்ட் அப்ளிகேஷன் உடன் இன்டிகிரேஷனுக்கான Build and Maintain RESTful APIs தெரிந்திருக்க வேண்டும்.
டேட்டா வேலிடேஷன் மற்றம் செரியலிஜெஷன் உள்ளிட்டவற்றுக்ககான பைத்தான் மற்றும் Pydantic உள்ளிட்டவற்றின் பவுண்டேஷன் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பெர்மாமன்ஸ் மற்றும் ஸ்கேலபிளிட்டி உள்ளிட்டவற்றின் ஆப்டிமைஸ் பேக்எண்ட் சிஸ்டம்ஸ் தெரிந்திருக்க வேண்டும். பேக்எண்ட் கோட் பேஸில் டீபக் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.
Data Storage மற்றும் Retrieval உள்ளிட்டவற்றுக்காக SQL Databases மற்றும் ORM frameworks(Sqlalchemy etc.) தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்டவர்கள் பைத்தான் டெவலப்பராக குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதேபோல் பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. அநேகமாக சென்னையில் கூட வாய்ப்பு கிடைக்கும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 29 (சனிக்கிழமை)நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படியாக விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். அதன்பிறகு விண்ணப்பதாரர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications