Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT JOBS: டிசிஎஸ் நிறுவனத்தில் காலியிடங்கள்.. சென்னையிலேயே பணி நியமனம்.. பிப்ரவரி 7 ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடிநிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 7 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ் ஐடி நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் டிசிஎஸ் அலுவலகம் அமைந்துள்ளது.

it jobs job tcs

இந்நிலையில் தான் டிசிஎஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது சென்னை அலுவலகத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

எந்த பிரிவில் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது குவாலிட்டி அசூரன்ஸ் ஆட்டோமேஷன் இன்ஜினியர்(Quality Assurance Automation Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு REST/SOAP APIs, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், போஸ்ட்மேன், Groovy and VB Script கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்.

என்னென்ன தகுதிகள் வேண்டும்

அதேபோல் டெஸ்ட்டிங் கான்செப்ட் மற்றும் மெத்தடாலஜி தெரிந்தருக்க வேண்டும். ஆட்டோமேஷன் பிரேம்வொர்க் டிசைனிங் டூல்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.குறிப்பாக BDD உடன் செலனியம் அல்லது Cuumber மற்றம் ஏபிஐ டெஸ்ட் ஆட்டோமேஷன் தெரந்திருக்க வேணடும்.
AWS(Cloud Concepts) பற்றி தெரிந்தருக்க வேண்டும். CI/CD பைப்லைனில் (Jenkins Spluk, maven, Bamboo) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம் எத்தனை ஆண்டுகள்

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

பிப்ரவரி 7 ல் இண்டர்வியூ

இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 7 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services Ltd, 1/G1, Sipcot IT Park, Navalur Kancheepuram District, Chennai, Tamil Nadu 603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

இண்டர்வியூவுக்கு செல்ல விரும்புவோர் அதற்கு முன்பாக விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+