IT JOBS: சென்னையிலேயே ஐடி வேலை ரெடி.. மார்ச் 14ம் தேதியை மறக்காதீங்க... டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது ரியாக்ட் ஜேஎஸ் (React JS) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பணிக்கு ரியாக்ட்/ஆங்குலர்/Vue உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அப்ளிகேஷன் டெவலப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ரியாக்ட்/ஆங்குலர்/Vue உள்ளிட்டவற்றில் பிரேம்வொர்க் காம்போனன்ட்ஸ் லைப் சைக்கிள் மற்றும் Redux பற்றி நல்ல புரிதல் இருக்க வேண்டும்.
தகுதிகள் என்னென்ன?
ஜாவா ஸ்கிரிப்ட்டிங் ஸ்கில்ஸ் மற்றும் ECMA 6 ஸ்டேன்டர்ட் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் என்பிஎம், வெப்பேக் உள்ளிட்டவை நன்கு அறிந்திருக்க ணேடும். ஜாவா, ரெஸ்ட்புல் ஏபிஐ (RESTFUL API's) உள்ளிட்டவை பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். UX டிசைனர் வழங்கும் இன்புட்களை பயன்படுத்தி UI ஃபிரேம்வொர்க் காம்போனென்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Material UI/Paper UI உள்ளிட்ட 3rd பார்ட்டி லைப்ரேரியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் தெரிய வேண்டும்
அதேபோல், Good to Have என்ற பிரிவில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ், எஸ்சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போர்ட்டபிள் அப்ளிகேஷன்ஸ் உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் UI அப்ளிகேஷனில் டீபக் பெர்மாமன்ஸ் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் எஸ்விஎன் அல்லது GIT உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி அனுபவம் எவ்வளவு?
மேலும் கிரிட்டிககல் திங்கராகவும், தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். Jenkins Scripts, Continuous Integration, Continuous Deployment உள்ளிட்டவற்றில் தெரிந்திருக்க வேண்டும். அதோடு Agile-லில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். இவைஎல்லலாவற்றுக்கும் மேலாக ரியாக்ட் ஜேஎஸ் பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மார்ச் 14ம் தேதி இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இண்டர்வியூ மார்ச் 14ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்டவை பற்றிய தகவல் வழங்கப்படும்.
அதன்படி இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தேர்வாகும் நபர்கள் நியமனம் செய்யப்படும் இடம் பற்றிய அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சென்னையில் டிசிஎஸ் அலுவலகம் உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் இருப்பினும் அங்கும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications