IT JOBS: சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்.. பிப்ரவரி 7 ம் தேதி இண்டர்வியூ.. ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ பிப்ரவரி 7 ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து React Js Senior Developer/Technical Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தபணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஸ்கில்செட்டாக React JS, Typescript, JavaScript, HTML, CSS இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் Redux, Redux saga அல்லத Redux Thunk, Middleware அல்லது UseQuery hook உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் Webpack, Module Bundler பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மே அதேபோல் யுனிட் டெஸ்ட்டிங் பிரேம்வொர்க்ஸ்ஸான Karma/JEST தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் கோட் வெர்ஷனிங் டூல்ஸ்களான git/bitbucket-யில் அனுபவம் கொண்டிருப்பதோடு, Agile, Scrum பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும். மேலும் அனலிசிஸ் ஸ்கில்ஸ் மற்றுமு் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ பிப்ரவரி 7 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Tata Consultancy Services, 1st floor open terrace garden, No 415/21, 24, kumaran Nagar, Old Mahabalipuram Road, Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications