IT Jobs: டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? ஏப்ரல் 25ம் தேதி இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் Service Now Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டிசிஎஸ். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்பதன் சுருக்கம் தான் டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் தற்போது சர்வீஸ் நவ் டெவலப்பர் (Service Now Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம். இந்த தகுதிகள் இருக்கும் பட்சத்தில் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
தகுதிகள் என்னென்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ITSM மற்றும் ITOM மாடூல்ஸ் உள்ளிட்டவை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். CMDB Configuration - Mainenance உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். ஜாவா ஸ்கிரிப்ட், கிளிட் ஏபிஐs (Glide APIs), எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், போர்ட்டல்ஸ் (Portals) விஜட்ஸ் மற்றும் ஃப்ளோ டிசைனர் (Widgets and Flow Designer) அறிவை பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் எவ்வளவு?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதை அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
ஏப்ரல் 25ம் தேதி இண்டர்வியூ
இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face to Face முறையில் இருக்கும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூ நடக்கும் இடம், நேரம் உள்ளிட்டவை உங்களுக்கு தெரிவிக்கப்படும். இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications