IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் நவம்பர் 29 ம் தேதி இண்டர்வியூ.. ஏராளமான காலியிடங்கள்.. தயாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை டிசிஎஸ் மேக்னம் அலுவலகத்தில் நவம்பர் 29ம் தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Java Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 12 ஆண்டு பள்ளி படிப்பு அதன்பிறகு கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

tcs-mega-walk-in-interview-for-java-developer-on-november-29-in-chennai

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முக்கிய ஸ்கில்செட் இருக்க வேண்டும். அதன்படி ஜாவா, ஸ்பிரிங், hibernate, microservices உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக ஜாவா/அட்வான்ஸ்ட் ஜாவா/ஜே2இஇ உள்ளிட்டவற்றில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும். REST, SOAP அடிப்படையிலான சர்வீசஸில் டிசைனிங், டெஸ்ட்டிங், மெயின்டெயினிங் தெரிந்திருக்க வேண்டும். யூனிட் டெஸ்ட்டிங் அனுபவம் மற்றும் திறமை கொண்டிருக்க வேண்டம். குறிப்பாக Mock framwork-களான JMockit or PowerMock உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்திலத்தில் சரளமாக பேசும் திறமை இருக்க வேண்டும். அதேபோல் SAFe பிரேம்வொர்க் தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.

DevOPS டூல்ஸ்களான GIT, Apache, Maven, Jenkins உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் அப்ளிகேஷன் செக்யூரிட்டி டூல்ஸ்களான SonarQube உள்ளிட்டவை தெரிந்திருப்பது நல்லது. இதுதவிர இன்னும் பல விஷயங்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இதற்கான இண்டர்வியூ நவம்பர் 29ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது TCS Chennai Magnum Office-யில் நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+