IT Jobs: சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மே 29ல் ஆன்லைனில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் இயங்கி வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ மே 29ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது.
நம் நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. சென்னை, பெங்களூர் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி Salesforce Consultant பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10, பிளஸ் 2 முடித்து கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் வரை அனுபவம்கொண்டிருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக End to End Implementation -ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது மே 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் Resume விவரங்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதையடுத்து விண்ணப்பங்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு ஆன்லைன் இண்டர்வியூ தொடர்பான விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. அதோடு தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்பவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications