IT Jobs: TCS ஐடி நிறுவனத்தில் வேலை ரெடி.. டிசம்பர் 5ம் தேதி இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜாவா ஸ்பிரிங்புட் (Java Springboot) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது.

அதேவேளையில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் கூடுதல் சம்பளம் பெறும் வகையில் வேறு நிறுவனங்களுக்கு மாற தயாராக உள்ளனர். இப்படி நிறுவனத்தை மாற்ற விரும்பும் நபர்களுக்காக டிசிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

it-jobs-tcs-walk-in-drive-for-java-springboot-role-in-chennai-and-interview-on-december-5

அதன்படி டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது ஜாவா ஸ்பிரிங்புட் (Java Springboot)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

குறிப்பாக ஸ்பிரிங்புட்டை பயன்படுத்தி ஜாவா பேஸ்ட் அப்ளிகேஷன்ஸ் டிசைன், டெவலப், மெயின்டெயின் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் RESTful APIs மற்றும் இன்டகிரேட்டன் வித் எக்ஸ்டனல் சிஸ்டம் அனுபவம் இருக்க வேண்டும்.

ஜாவா (8 அல்லது அதற்கு மேல்) உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஸ்பிரிங்புட், ஸ்பிரிங் எம்விசி மற்றும் ஸ்பிரிங் செக்யூரிட்டி உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.

இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 5ம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Tata Consultancy Services Ltd, Magnum Office, 200 Feet Radial Road, MCN Nagar Extension, Thoraipakkam, Chennai Chennai - 600 097 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+