IT Jobs: சென்னை - பெங்களூரில் வேலை ரெடி.. அழைக்கும் TCS.. ஜூன் 20ம் தேதி இண்டர்வியூ
சென்னை: சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜூன் 20ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 'லீட் ஜாவா டெவலப்பர்' (Lead Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.

அதன்படி ஜாவா 8+, ஸ்பிரிங்புட், ரெஸ்ட் ஏபிஐ, கோடிங் அனுபவத்துடன் மைக்ரோசர்வீசஸ் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா ஸ்ரெக்ட்ச்சர்ஸ் இம்பிளிமென்டேஷன் மற்றும் ஆப்டிமைசேஷன், மல்டி த்ரெட்டிங், கான்கரன்சி மற்றும் எரர் ஹேண்ட்லிங் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் டேட்டா பேசஸ்ஸை பொறுத்தவரை MySQL/Oracle, MongoDB தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் யுனிட் டெஸ்ட்டிங் ஜேயுனிட் தெரிந்திருக்க வேண்டும். லினக்ஸ்/யுனிக்ஸ் டெவ் என்விரான்மென்ட்ஸ் எக்ஸ்போஷர் இருக்க வேண்டும். அதேபோல் டெக்னிக்கல் டீமில் 8+ மெம்பருடன் லீடர்ஷிப் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 12 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூன் 20ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் TCS Ozone Techno Park, 24, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரிக்க செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications