Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாவலூரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் மார்ச் 21 ம்(நாளை மறுநாள்) தேதி இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

நம் நாட்டில் முன்னணி தொழில்துறை நிறுவனமான டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனும் டிசிஎஸ் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது.

tcs-walk-in-drive-for-salesforce-omnistudio-on-march-21-in-chennai

இந்த டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Salesforce Omnistudio பணிக்கு ஆட்கள் தேர்வு யெ்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Salesforce Omnistudio ஸ்கில்ஸை கொண்டிருக்க வேண்டும்.

என்னென்ன தகுதி வேண்டும்?

அதேபோல் FSC Cloud-லில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Omnistudio, Flow Builder,Flow Orchestrator உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் FSC Cloud, Data Model Optimiation-யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். லைட்டிங் வெப் காம்போனென்ட் மற்றும் அபெக்ஸ் பயன்படுத்தி அப்ளிகேஷன் டெவலப் மற்றும் கஸ்டமைசேஷன் தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம் என்ன?

Omniscripts,Data Raptors, Flex Cards, Integration Procedures உள்பட பிறவற்றை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 13 ஆண்டு வரையிலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 21ல் இண்டர்வியூ

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இதற்கான இண்டர்வியூ சென்னை நாவலூரில் மார்ச் 21 ம் தேதி நடைபெற உள்ளது.

இண்டர்வியூ நடக்கும் இடம்

இண்டர்வியூ என்பது Ozone Techno park Address: No 1/13, Old mahabalipuram Road, Navallur, Chennai - 603 103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த முகவரியில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+