IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஏப்ரல் 18 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ சென்னையில் ஏப்ரல் 18 ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது Sharepoint பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இண்டர்வியூவிற்கு செல்ல விரும்புவோர் Share Point on Premises மற்றும் Share Point Online Platfoms மற்றும் கஸ்டம் டெவலப்மென்ட் உள்ளிட்டவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
என்னென்ன தகுதிகள்?
அதேபோல் SPFX, Angular/React, C#, .NET, Share point மற்றும் MS Graph APIS, மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் அசூர் பிளாட்பார்ம் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். SPFx வெப்பார்ட்ஸ் டெவலப்மென்ட், எஸ்பிஎப்x எக்ஸ்டென்ஷன் உள்ளிட்டவற்றில் தெரிந்திருக்க வேண்டும். ASP.NET, .NET Frameworks -யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஜாவா ஸ்கிரிபட், எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ், எக்ஸ்எம்எல், ஜேகுயரி, எஸ்க்யூஎல் சர்வர், வெப் சர்வீசஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
சர்ட்டிகேட்ஸ்
மேலும் CSOM, JSOM, API உள்ளிட்டவற்றில் அனுபவம் இருப்பதோடு, MS 900 - Microsoft 365 Fundamentals உள்ளிட்டவற்றில் சர்ட்டிபிகேஷன் இருக்க வேண்டும். அதேபோல் MS 600 - Building application and solutions with microsoft 365 core services சர்ட்டிபிகேட் இருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.
பணி அனுபவம் என்ன?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
ஏப்ரல் 18 ம் தேதி இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 18 ம் தேதி (சனிக்கிழமை) சென்னை Magnum அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face to Face முறையில் இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
அதற்கு முன்பாக [email protected] முகவரிக்கு ரெஸ்யூம் உள்பட முழு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் ஏப்ரல் 18 ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications