IT Jobs: 7 பிரிவுகளில் காலியிடங்கள்.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஏப்ரல் 18-ல் இண்டர்வியூ
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பைத்தான் டெவலப்பர், அசூர் டேட்டா இன்ஜினியர் உள்பட 7 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 18 ம் தேதி சென்னை, புனே, மும்பையில் உள்ள டிசிஎஸ் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் 7 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி டெராடேட்டா (Teradata), பைத்தான் டெவலப்பர் (Python Developer) பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதேபோல் மைஎஸ்க்யூஎல் (MySQL), டேட்டா மாடலிங் (Data Modeling), Alteryx, Snowflake + DBT, Azure Date Engineer என மொத்தம் 7 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பபபட உள்ளது.

பணி அனுபவம் எவ்வளவு?
இந்த பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படலாம்.
ஏப்ரல் 18 ல் இண்டர்வியூ
இதற்கான இண்டர்வியூ சென்னை, புனே, மும்பை ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ ஏப்ரல் 18 -ல் நடக்கும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு அவர்களுக்கு இண்டர்வியூ நேரம், முகவரி உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும்.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
இந்த பணியை விரும்புவோர் சில முக்கிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு Valid EP நம்பரை முதலில் உருவாக்க வேண்டும். அதன்பிறகு அப்ளிகேஷனை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்யும்போது லேட்டஸ்ட் ரெஸ்யூம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இணைக்க வேண்டும். இதுதவிர பான் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதேபோல் இண்டர்வியூவின்போது ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதுதவிர ரெஸ்யூம் ஜெராக்ஸ், TCSiBegin அப்ளிகேஷன் பார்ம், ஆதரர் கார்டு, பார்ன் கார்டு ஜெராக்ஸ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொண்டு அதில் உள்ள லிங்க் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications