IT Jobs: ZOHO-வில் குவிந்திருக்கும் வேலை.. வந்தாச்சு புது அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க.. ஆகஸ்ட் 15 கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
தமிழகத்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஜோஹோ நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர்ஸ் (Technical Support Engineers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் விண்ணப்பம் செய்வோர் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை client facing role-லில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். புதிய டெக்னாலஜிகளை கற்றுக்கொண்டு பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.
மேலும் பணியிடங்களை மாற்றம் செய்தால் எங்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்க வேண்டும். அதேபோல் ரோட்டேஷனல் ஷிப்ட் என்பதால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெக்னிக்கல் சப்போர்ட், புராடெக்ட் டெமோ மற்றும் கஸ்டமர் டிரெய்னிங், கஸ்டமர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சொல்யூஷன்ஸ் வழங்குவது, வெளிநாட்டு கஸ்டமர்களுக்கு தொலைபேசி மூலமாக பேசி சப்போர்ட் வழங்க வேண்டி இருக்கும்.
அதேபோல் தேவை என்றால் கஸ்டமர்களுடன் இ-மெயில், சாட் முறையில் பேச வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இந்த அறிவிப்பில் பணியிடம் பற்றிய விபரம் கூறப்படவில்லை. இதனால் தேவையை பொறுத்து குறிப்பிட்ட அலுவலகத்தில் நியமனங்கள் இருக்கும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 15ம் தேதி கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக ஜோஹோ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications