விமானப் படையில் வெயிட்டான வேலைவாய்ப்பு! அழைக்கும் ’அக்னிபத்’.. அக்னிவீர் வாயுவாக சூப்பர் சான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ராணுவத்தின் விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிக்கப்பட்டுள்ளது. திறமையும் தகுதியும் வாய்ந்த ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என விமானப்படை அறிவித்துள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய இந்தியாவின் முப்படைகளில் தற்காலிகமாக அக்னி வீரர்கள் என அழைக்கப்படும் ராணுவ வீரர்கள் அக்னி பத் திட்டத்தின் மூலம் இணைக்கப்படுகின்றனர். 17.5 வயது முதல் 21 வயது வரை கொண்ட இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டுமே இந்த பணியில் இணைக்கப்படுவார்கள்.

IAF Agniveervayu

நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு சிறந்த திறன் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரர்கள் நிரந்தர பணியிலும், மீதம் உள்ளவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு சேவா நிதி தொகுப்பை பெறுவார்கள். முப்படைகள்விதிகளின்படி உடல் தகுதி தேர்வு மற்றும் பிற தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய விமானப்படையின் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு ஆட்சிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," இந்திய இராணுவத்தின் விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர்வாயு 02/2027-க்கான ஆட்சேர்ப்பிற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை வருகின்ற 26.07.2026 வரை பதிவு மேற்கொள்ளலாம்.

இணையவழித் தேர்வு 22.09.2026 மற்றும் 23.09.2026 அன்று நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தாம்பரத்தில் உள்ள 8 Airmen Selection Centre வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் www.iafrecruitment.edcil.co.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இணையவழி விண்ணப்ப படிவத்தை நிரப்புவது தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு, உதவி மையம் எண். 9513253233-ஐ அல்லது 011-25694209/25699606 ஆகிய எண்களை அனைத்து வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும், தகுதியுமுள்ள இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+