ஐஆர்சிடிசியில் வேலை.. எக்ஸாம் கிடையாது.. மாதம் 30 ஆயிரம் சம்பளம்! செம சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: ரயில்வேயின் ஒரு அங்கமான, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் (ஐஆர்சிடிசி) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸாம் எதுவும் இல்லாமல் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, பயணிகளுக்கான விருந்தோம்பல் சேவை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ரயில்வேயின் ஒரு அங்கமான ஐஆர்சிடிசியில் தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? பணியிடங்கள் விவரம் உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்;
* Hospitality Monitors - 64 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தில் பிஎஸ்சி இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மேண்ட் மற்றும் கேட்டரிங் சர்வீஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* எம்பிஏ (டூரிசம் & ஹோட்டல் மேனேஜ்மெண்ட்) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பதார்கள் 2024 கல்வி ஆண்டிற்கு முன்பாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி /எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் & தேர்வு முறை
விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. ஊழியர்களின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றால் எந்த நேரத்திலும் ஒருமாதம் நோட்டீஸ் கொடுத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். எக்ஸாம் கிடையாது. நேர்முகத்தேர்வு மட்டுமே நடைபெறும். walk in interview அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்
1. IHMCT, Trivandrum (Kerala)
G.V.Raja Road, Kovalam, Trivandrum
-695527
Date of Walk-in Interview 08/11/25
2. Institute of Hotel Management Bengaluru (Karnataka)
Seshadri Rd, near M S Building,
Ambedkar Veedhi, Bengaluru,
Karnataka 560001. 12/11/25
3. IHMCT & AN, Chennai (Tamil Nadu)
CIT Campus, Taramani, Chennai -
600113. 15/11/25
4. State Institute of Hotel Management and Catering Technology, Thuvakudi
Thanjavur Rd, Thuvakudi, Tamil Nadu
18/11/25
இதர விவரங்கள்:
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு சிறந்த கம்யூனிகேஷன் திறன் அவசியம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற உள்ளூர் மொழிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்து இருந்தால் முன்னுரிமை தரப்படும். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். கணினி அறிவு அவசியம். ரிபோர்ட்கள் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here














Click it and Unblock the Notifications