இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்.. 1 லட்சம் வரை சம்பளம்.. செம சான்ஸ்.. விட்றாதீங்க!
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) அதிகாரி (எஸ் ஓ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 127 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும், விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாகவும் நேரடியாகவும் நிரப்பப்படுகிறது.

பணியிடங்கள் விவரம்:
அந்த வகையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
சிவில், ஆடிட்டிங், எலக்ட்ரிக்கல், ஆட்டோ மொபைல், ஆட்டோமேஷன், எடிட்டிங், டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா என்ஜினியரிங் உள்பட மொத்தம் 127 காலிப்பணியிடங்கள் உள்ளன. பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும்.
கல்வித் தகுதி
பி.இ, பிடெக், எம்பிஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் கோரப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம் மற்றும் கல்வி தகுதி குறித்த விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
மேனேஜர் MMGS II - ரூ. 64,820 - 93,960/-
மேனேஜர் MMGS III - ரூ. 85,920 - 1,05,280/- வரை வழங்கப்படும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,000 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 175 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 03.10.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.iob.in/upload/CEDocuments/iobLateral-Recruitment-Specialist-Officers-11092025.pdf












Click it and Unblock the Notifications