இந்தியன் வங்கியில் வேலை வேணுமா?.. 203 காலிப்பணியிடங்கள்.. ரூ.63 ஆயிரம் சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் 63 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றி இங்கே காணலாம்.
நாடு முழுவதும் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மேனேஜர், Chief மேனஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணபிக்க வரும் 28 ஆம் தேதி கடைசி நாளாகும்.

பணி மற்றும் வயது வரம்பு
மேனஜர் பணி:
* வயது வரம்பு: 25 முதல் 35
Chief Manager:
* வயதுவரம்பு 27 முதல் 38- வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
சீனியர் மேனேஜர்:
* 29-வயது முதல் 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எத்தனை பணியிடங்கள்:
* மொத்தம் 203 காலி பணியிடங்கள் உள்ளன.
சம்பள விவரம்:
* மாதம் ரூ.36,000 முதல் 63,840 வரை

கல்வி தகுதிகள்.
CA,ICWA,CFA அல்லது நிதியியல், , வங்கியியல், மேலாண்மை, எச்ஆர், சந்தையியல் போன்ற பாடப்பிரிவுகளில் MBA அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் BE , B Tech முடித்திருக்க வேண்டும். பணி அனுபவத்தை பொறுத்தவரையில் மேனேஜர் பணிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும், இதரப் பணிகளுக்கு 5 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம் எவ்வளவு?
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, இதர பிரிவினர்கள் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். www.indianbank.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சப்மிட் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.2.2023. இது குறித்த மேலும் விவரங்கள் www.indianbank.in என்ற இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications