விழுப்புரம் அங்காளம்மன் கோயிலில் வேலை வாய்ப்பு.. ரூ.1.16 லட்சம் சம்பளம்! விண்ணப்பிக்க ரெடியா?
விழுப்புரம்: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் மேல் மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.1.16 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள 06 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்தக் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம், அரசு விதிகளின்படி சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பணியிட விவரம்:
* மருத்துவர்: 02
* உதவி செவிலியர்: 02
* நர்சிங் அசிஸ்டெண்ட்: 02 என மொத்தம் 06 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* மருத்துவர்: எம்பிபிஎஸ் (MBBS) முடித்திருக்க வேண்டும்.
* உதவி செவிலியர்: நர்சிங் படிப்பு சான்றிதழ் அல்லது நர்சிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* நர்சிங் அசிஸ்டெண்ட்: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுகாதார பணியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 வயது.
சம்பள விவரம்:
* மருத்துவர்: ரூ.36,700 - ரூ.1,16,200
* உதவி செவிலியர்: ரூ.18,500 - ரூ.58,600
* நர்சிங் அசிஸ்டெண்ட்: ரூ.11,600 - ரூ.36,800
பிற நிபந்தனைகள்:
* இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
* தொற்று நோய், உடல் அல்லது மனநிலை குறைபாடு உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
* நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள், கடன் தீர்க்க முடியாதவர்கள், அரசுப்பணியிலிருந்து தண்டனையால் நீக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்காக அரசிதழில் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
* அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாகவோ அல்லது "24.11.2025 மாலை 5.45 மணிக்குப் பிறகு" வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
* ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்ப உறையின் மீது அந்தந்த பதவியின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
* தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும்.
* நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டது.
* விண்ணப்பதாரர் நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராக இருக்க வேண்டும்.
* அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் கூடிய புகைப்பட நகல்களாக இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப வேண்டாம்.
* ராஜீகத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
* விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய:
[http://melmalayanurangalamman.hrce.tn.gov.in](http://melmalayanurangalamman.hrce.tn.gov.in)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / செயலாளர்
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
மேல் மலையனூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் - 604204
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி!












Click it and Unblock the Notifications