job: தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு, என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்த விவரங்களை இங்கு காணலாம்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) உள்ளது. தமிழகத்தில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலா பயணிகளுக்கான பேருந்து சேவை உள்ளிட்ட பணிகளை சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது.

பணியிடங்கள் விவரம்:
அரசு பொதுத்துறை நிறுவனமாக உள்ள இந்த டிடிடிசியில் 04 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் யார்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
* இளநிலை கட்டிடக்கலைஞர் - 01
* சைட் என்ஜினியர் (சிவில்) - 02
* AGM (மார்க்கெட்டிங்) - 01
கல்வித் தகுதி:
* ஜூனியர் ஆர்க்கிடெக் எனப்படும் இளநிலை கட்டிடக் கலைஞர் பணிக்கு கட்டிடக்கலை துறையில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
* சைட் என்ஜினியர் பணிக்கு சிவில் என்ஜினியரிங் பிரிவில் 5 ஆண்டுகள் பட்டப்படிப்பு அவசியம்.
* ஏஜிஎம் (மார்க்கெட்டிங்) பணிக்கு எம்பிஏ மார்க்கெட்டிங்/ சுற்றுலாத்துறை/ வணிக நிர்வாகம் ஆகிய ஏதேனும் ஒன்றை எடுத்து படித்து இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 23.03.2026 கடைசி நாள் ஆகும். https://ttdconline.com/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் கவனமாக படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதி இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ttdconline.com/
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications