BEL நிறுவனத்தில் வேலை.. பிஇ/பி.டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. கை நிறைய சம்பளம்!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Project Engineer I பணிகளுக்கென 27 காலிப்பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.

கல்வித் தகுதி மற்றும் காலிப்பணியிடங்கள்: Project Engineer I பதவியில் எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் 23 பேரும் மெக்கானிக்கல் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பி இ / பிடெக் படித்து இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிஸ் & கம்யூனிகேஷன்,/ E &T/ டெலி கம்யூனிகேஷன்ஸ் அல்லது மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அது மட்டும் இன்றி அனைத்து செமஸ்டர்களிலும் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி வகுப்பினர் பாஸ் செய்து இருந்தால் போதும். தொடர்புடைய தூறைகளில் இரண்டு ஆண்டுகள் அனுபம் பெற்றிருத்தல் வேண்டும். இது குறித்த முழு விவரங்களும் தேர்வு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு?: 1.06.2023 தேதிப்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. மும்பை , கொல்கத்தா ஆகிய நகரங்களில் பணி அமர்த்தப்படுவார்கள்.
சம்பளம் எவ்வளவு?: இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு தேவை மற்றும் செயல்பாடு அடிப்படையில் ஒராண்டு ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். முதல் வருடத்தில் 40 ஆயிரமும் இரண்டாவது வருடத்தில் 45 ஆயிரமும் 3-வது வருடத்தில் 50 ஆயிரமும் நான்காவது வருடத்தில் 55 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் https://bel-india.in/Default.aspx என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்த பிறகு தபால் வழியாக கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
MANAGER (HR/ADSN, ES & C-QA)
Bharat Electronics Limited
Jalahalli P.O., Bengaluru 560013.
விண்ணப்பிக்க கடைசி நாள்: வரும் 29.07.2023 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். தேர்வுக் கட்டணமாக ரூ.472 செலுத்த வேண்டும். எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த முடியும். தேர்வு அறிவிப்பு குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் https://bel-india.in/Documentviews.aspx?fileName=ADSN%20PE%20Revised%202023-18-07-23.pdf
செய்யவும்.












Click it and Unblock the Notifications