ஐசிஎம்ஆர்-இல் காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.1,12,400 வரை சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஐசிஎம்.ஆர் - இல் 79 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை கீழே காணலாம்.
இந்திய மருத்துவ கவுன்சிலின் மலேரிய குறித்த ஆராய்ச்சி நிறுவனமான( NIMR) வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியியிட்டுள்ளது. டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட், டெக்னிசியன், லேபரட்டரி அட்டண்டட் ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. மொத்தம் 79 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு 26 பேரும் டெக்னிஷியன் பணிக்கு 49 பேரும் லேப் அட்டண்டண்ட் பணிக்கு 04 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். 21.07.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ. 300 டிடி எடுத்து விண்ணப்பட படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். தேர்வுக்கான கட்டணம் எக்காரணத்தை கொண்டும் திருப்பி அளிக்கப்படாது.

கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் BE / B Tech / Bachelor Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படித்தவர்கள் ஒவ்வொரு விதமான பணிக்கும் கல்வித்தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
பணியிடத்திற்கான கல்வித்தகுதி விவரங்களை தேர்வு குறித்த அறிவிப்பில் தெரிந்து கொள்ள முடியும். சம்பள விவரத்தை பொறுத்தவரை தேர்வாகும் பணிகளுக்கு ஏற்ப 18 ஆயிரம் முதல் 1,12,400-வரை ஊதியம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisement_English_NIMR.pdf என்ற அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்படும்.
தகுதியான விண்ணப்பங்களுக்கு தேர்வு எழுத அட்மிட் கார்டு கிடைக்கும். தேர்வு நடைபெறும் இடம், தேதி உள்ளிட்ட இடங்களை தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் ஐசிஎம்ஆர் இணையதளத்தில் அவ்வப்போது செக் செய்து கொள்ள வேண்டும்.
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications