என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..இஸ்ரோவில் வேலை..கை நிறைய சம்பளம்..விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 303 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களுகு விண்ணப்பிக்க தகுதி என்ன? சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவியலாளர்/ பொறியியலாளர் உள்ளிட்ட 303 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான தேதி 25.05.2023 இருந்து தொடங்கியது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2023 ஆகும்.

மொத்தம் உள்ள காலிப்பணியிடங்கள் 303:
* Scientist/ Engineer 'SC' (Electronics)காலியிடங்களின் எண்ணிக்கை: 92 ஆகும். இதற்கான கல்வித் தகுதி BE/ B.Tech in Electronics & Communication Engineering முடித்து இருக்க வேண்டும்.
* Scientist/ Engineer 'SC' (Mechanical) பணியில்ல் 163 காலியிடங்கல் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி BE/ B.Tech in Mechanical Engineering ஆகும்.
* Scientist/ Engineer 'SC' (Computer Science) பணியில் 48 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித்தகுதி BE/ B.Tech in Computer Science Engineering ஆகும்.
* Scientist/Engineer-SC (Electronics) பணியில் இரண்டு காலிப்பணியிடங்கள் உள்ளன.
* Scientist/Engineer-SC (Computer Science) Autonomous Body- பணியில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?:
* மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.isro.gov.in/ICRB_Recruitment7.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பம் தொடங்கிய நாள்: 25.05.23 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.06.2023 ஆகும்.
* விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250 ஆகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 16.06.2023 ஆகும்.
* விண்ணப்ப கட்டணத்தை யுபிஐ, நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி கட்டலாம்.
* குறைந்த பட்ச அடிப்படை சம்பளம்: ரூ. 56,100 ஆகும்.
* வயது வரம்பு: 14.06.2023 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளுக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு உண்டு.
* இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications