
கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் வேலை!.. ரூ 34 ஆயிரம் சம்பளம்.. சடக்குனு படிச்சி.. படக்குனு அப்ளை செய்ங்க!
கோவை: மாதந்தோறும் ரூ 34 ஆயிரம் ஊதியத்தில் அரசு மருத்துவமனையில் வேலை செய்ய யாரெல்லாம் ரெடியாக இருக்கிறீர்கள், அவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ அலுவலர், பல் மருத்துவ உதவியாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பை கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. Dental Surgeon எனப்படும் பல் மருத்துவ அலுவலர் பணிகளுக்கு 8 காலிப்பணியிடங்களும், Dental Assistant எனப்படும் பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 7 காலிப்பணியிடங்களும் உள்ளன.
திடீரென ரோஜா சீரியல் அர்ஜுன் வெளியிட்ட உருக்கமான பதிவு! இந்த ஒரு நிலைமையை எதிர்பார்க்கலையே ரசிகர்கள்

பல் மருத்துவ அலுவலர்
இதில் பல் மருத்துவ அலுவலர் பணிக்கு மாதந்தோறும் ஊதியம் ரூ 34 ஆயிரமும், அது போல் பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ 13,800 ம் வழங்கப்படும். பல் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிடிஎஸ் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பல் மருத்துவ உதவியாளர்
பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 35 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. உரிய ஆவணங்களுடன் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திற்கு வர வேண்டும்.
விண்ணப்பப் படிவம்
இந்த லிங்கில் உள்ள படிவத்தை டவுன்லோடு செய்து அதை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அது போல் மத்திய அரசு நிறுவனத்தில் 10, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியின் இந்தியா கவுன்சில் கீழ் செயல்படும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும்.

தகுதி என்ன?
இதில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைப்ரரி இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் பணிக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளது. இதற்கு வயது வரம்பு 27 க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ 35, 400 முதல் ரூ 1,12,400 வரை கிடைக்கும். லைப்ரரி சயின்ஸ் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

என்ன பணி? எத்தனை காலியிடம்?
Lower division clerk(LDC) பணிக்கும் ஒரே ஒரு காலியிடம் உள்ளது. வயது வரம்பு 32 ஆகும். மாத ஊதியமாக ரூ 19,900- முதல் 63,200 வரை வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தட்டச்சு திறனும் இருத்தல் வேண்டும். Driver (Ordinary Grade) பணிக்கு இரு காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு அதிகபட்ச வயது 27 ஆகும். மாத ஊதியம் ரூ 19,900- முதல் 63,200 வரை வழங்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு
விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதன் அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://iwst.icfre.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ 700 ஐ டிடி மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 200 செலுத்தினால் போதும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து The Director,Institute of Wood Science & Technology,18th cross, Malleswaram, Bengaluru - 560003 என்ற முகவரிக்கு டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.