1.5 கோடி சம்பளத்தில் வேலை.. ஏஐ உதவியால் நேர்காணலில் இளைஞர் வென்றது எப்படி? பகிர்ந்த சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செயற்கை நுண்ணறி எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக மாறி வருகிறது என்பதற்கு பல்வேறு நிஜகதைகள் வெளியாகி வருகின்றன. ஒருவர் ஏஐயை பயன்படுத்தி வேலைக்கான நேர்காணலில் வெற்றி பெற்று, ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பெறும் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் எப்படி ஏஐ பயன்படுத்தி 1.5 கோடி சம்பளம் பெறும் வேலைக்கான நேர்காணலில் வென்றேன் என்பதற்காக தனது உத்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் இதுபற்றி கூறுகையில், "10 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து, 3 முறை பதவி உயர்வும் பெற்ற என்னை, பிப்ரவரி மாத இறுதியில் ஒரே நாளில் பணி நீக்கம் செய்துவிட்டார்கள். இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கடந்த 5 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏராளமான இடங்களில் என்னை நிராகரித்தார்கள், தொடர்ச்சியாக பல இண்டர்வியூக்களை சந்தித்தேன்.

Job with a 1 5 Crore Salary How a Man Succeeded in the Interview with AI Assistance

திடீரென வேலை இழந்தேன்

திடீரென வேலை இல்லை என்று ரத்து செய்தார்கள். இப்போதைக்கு ஆள் எடுக்கவில்லை. நிறுத்தி வைத்துள்ளார்கள் என்று கடைசி நேரத்தில் அறிவிப்பார்கள். இப்படி பல வேலைகளை எனக்கு கிடைக்காமல் போயிருக்கிறது. அதேபோல் இந்த வேலை எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யவருக்கே தரப்போகிறோம் என்றும் கூறி ஏமாற்றங்களை தந்தார்கள். மீண்டும் எப்படியாவது வேலைக்கு சேர முயன்ற எனக்கு இப்படி பல்வேறு தடைகள் வந்ந வண்ணம் இருந்தது.

ஆனால், இன்று எனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஆஃபர் லெட்டர் கிடைத்துள்ளது, அந்த ஆஃபர் லெட்டரை பார்த்ததும் எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது! அதுவும் முந்தைய சம்பளத்தை விடக் கூடுதல் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது! வேலைக்குச் சேரும் முதல் நாளிலிருந்தே எனக்கு பல நன்மைகள் கிடைக்கும், அதோடு நான் வேலைக்கு சேரும் டீமும் மிகவும் அருமையாக இருக்கிறது.

எனது பின்னணி

எனது அனுபவம் கிளையன்ட் சர்வீசஸ் துறையில் உள்ளது (பெரும்பாலும் ஏஜென்சிகளே விரும்புவார்கள்). ஆனால் நான் ப்ராஜெக்ட் மேனேஜர், என்கேஜ்மென்ட் மற்றும் அக்கவுண்ட் (விற்பனை சாரா) பணிகளுக்கு விண்ணப்பித்து வந்தேன். இந்த வேலையை நான் 'LinkedIn' தளத்தில் கண்டு பிடித்து விண்ணப்பித்தேன். புதிய நிறுவனம் ஏஜென்சி உலகிற்கு வெளியே உள்ளது; மேலும் இது ஹைபிரிட் / நெகிழ்வான வேலை நேரத்தைக் கொண்டது.

ஐந்து மாத போராட்டம்

கடந்த ஐந்து மாதங்களாக வேலை கிடைக்காமல் மனஉளைச்சலுடன், சோகமான விஷயங்களிலேயே நேரத்தைக் கழித்தவன் என்பதால், உங்களுக்கு நம்பிக்கையூட்ட இதை இதை பகிர்கிறேன். நம்பிக்கையோடு காத்திருங்கள்! உங்களுக்கும் நிச்சயம் வேலை கிடைக்கும்!" என்று கூறியருந்தார்.

ரூ. 1.5 கோடி சம்பளத்தில் வேலை பெற ஏஐ அவருக்கு உதவியது எப்படி?

அவர் தனது நேர்காணல் திறனை மேம்படுத்த ஏஐ ஆப்களை பெரிதும் பயன்படுத்தி உள்ளார்கள். தான் சேரப்போகும் வேலைக்கான விவரங்கள் மற்றும் தன்னை நேர்காணல் செய்யப்போகும் நபர்களின் விவரங்களை ஏஐ ஆப்களில் டைப் செய்து பார்த்துள்ளார். இதன் மூலம் கேட்கப்படக்கூடிய கேள்விகள், நேர்காணல் செய்பவர்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் தனது திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான ஸ்டார் வடிவப் பதில்களை ஏஐ மூலம் தயார் செய்தார். நேர்காணலின் போது அளவுக்கு அதிகமாக வளவளவென்று பேசுவதைத் தவிர்த்து, பதவிகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்ல ஏஐ அவருக்குப் பெரிதும் உதவியது.

கூடுதல் சம்பளத்துடன் புதிய வேலை

தற்போது ஏஜென்சி துறைக்கு வெளியே உள்ள ஒரு நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்திருக்கிறது. இந்த வேலைக்கு ஆண்டுச் சம்பளமாக சுமார் ₹1.30 கோடி, அதனுடன் 15% ஆண்டு போனஸ் மற்றும் முதல் நாளிலிருந்தே மருத்துவச் சலுகைகள் போன்றவை அவருக்கு கிடைத்துள்ளது. சம்பளத்தை இன்னும் உயர்த்தப் பேரம் பேசலாமா என அவர் நேர்காணலின் போது யோசித்துள்ளார், எனினும் முந்தைய சம்பளத்தை விட அதிகம் என்பதால் அந்த ஆஃபரை அவர் ஏற்றுக்கொண்டார்.

முயற்சியே வெற்றி தரும்

நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்த அவர், தனக்கு கிடைக்காது என்று நினைக்கும் வேலைகளுக்குக் கூடத் தொடர்ந்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விடாமுயற்சியே இதற்குத் தீர்வு என்றும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். மேலும், நேர்காணல் தயாரிப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு AI தொழில்நுட்பம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்தினார் என்பது பலருக்கும் நல்ல பாடமாகும். ஏஐ மூலம் நீங்கள் என்னவெல்லாம் கற்றுக்கொண்டீர்கள், உங்கள் பிரச்சனைகளுக்கு ஏஐ தந்த உதவி என்ன என்பதை கமெண்டில் கூறுங்கள். நெட்டிசன் ஒருவர் நேர்காணல்களின் போது STAR முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+