திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. 760 காலிப்பணியிடங்கள்.. ஐடிஐ, டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா? செம சான்ஸ்
சென்னை: திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி அப்ரெண்டீஸ், தொழில்நுட்ப அப்ரெண்டீஸ், வர்த்தக அப்ரெண்டீஸ் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பெல் ( BHEL) எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 15 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் திருச்சியிலும் உள்ளது.

பணியிடங்கள் விவரம்:
கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் பயிற்சி பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றி பார்க்கலாம்.
1. பட்டதாரி அப்ரெண்டீஸ் - 120
2. தொழில்நுட்பஅப்ரெண்டீஸ் - 90
3. வர்த்தக அப்ரெண்டீஸ் - 550
பட்டதாரி அப்ரெண்டீஸ்
1. மெக்கானிக்கல் என்ஜினியரிங் - 70
2. கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம் - 10
3. சிவில் பொறியியல் - 10
4. மின்னணுவியல் & தொடர்பு பொறியியல் - 05
5. மின்வியல் & மின்னணுவியல் பொறியியல் - 05
6. கணக்கியல் - 10
7. உதவியாளர்-மனிதவளம் - 10
கல்வி தகுதி:
ஐடிஐ, டிப்ளமோ, பிஇ/ பிடெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணியின் தன்மைக்கேற்ப துறை ரீதியான பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். அக்கவுண்டன்சி அப்ரெண்டீஸ் பயிற்சி பணிக்கு பிகாம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி ஹெச்.ஆர் பணிக்கு பிஏ பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி மற்றும் பணியிடங்கள் குறித்து தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
1.பட்டதாரி அப்ரெண்டீஸ் - ரூ.12,000/-
2. டெக்னீஷியன் அப்ரெண்டீஸ் - ரூ.11,000/-
3. ஐடிஐ - ரூ.11,050/-
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www..apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்; 28.08.2025 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்; 15.09.2025 ஆகும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://trichy.bhel.com/tms/app_pro/Grad_TPFB_2025_26.pdf
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications