10 ம் வகுப்பு, ஐடிஐ முடிச்சுருக்கீங்களா? கொச்சியில் வேலை.. மாதம் ரூ. 70 ஆயிரம் சம்பளம்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 70 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளது. கப்பல் கட்டுதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் இங்கு நடைபெறுகின்றது. கேரள மாநிலத்தில் உள்ள இந்த ஷிப்யார்டு நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்த அடிப்படையிலும் நிரந்தர பணியாளர்களும் இதில் அடங்குவர்.

job chennai Employment

கொச்சி ஷிப்யார்டு நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் குறித்து அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தற்போது காலியாக உள்ள கிரேன் ஆபரேட்டர், டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

கிரேன் ஆபரேட்டர்: 06
ஸ்டாஃப் கார் டிரைவர்: 01 என மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பபு்படுகின்றன .

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். ஃபிட்டர் அல்லது மெக்கானிக் மோட்டார் அல்லது மெக்கானிக் டீசல் பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

கார் டிரைவர்:

கார் டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்து இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

* கிரேன் ஆபரேட்டர் (டீசல்) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 50 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஸ்டாப் கார் டிரைவர் பணிக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* சம்பளத்தை பொறுத்தவரை கிரேன் ஆபரேட்டர் பணிக்கு ரூ. 22,500 - ரூ. 73,750 வரை வழங்கப்படும்
ஸ்டாப் கார் டிரைவர் பணிக்கு ரூ. 21,300 - ரூ. 69,840 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை:

கொள்குறி வகையிலான எழுத்து தேர்வு, பிரக்டிக்கல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒரு முறைக்கு இருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு பிரிவுக்குள் வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://cochinshipyard.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 6.05.2025 கடைசி நாளாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படிக்க: https://cochinshipyard.in/uploads/career/f479bc8278cb454ce4fd64559246bce3.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+