திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. 354 பணியிடங்கள்! ஐடிஐ, டிப்ளமோ முடிச்சவங்களுக்கு சூப்பர் சான்ஸ்
திருச்சி: திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 354 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி அப்ரெண்டீஸ், டெக்னிக்கல் அப்ரெண்டீஸ், ஐடிஐ அப்ரெண்டீஸ் ஆகிய பதவிகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்? எப்படி விண்ணப்பிப்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று திருச்சி பெல் நிறுவனம். பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் பெல் நிறுவனம் உள்ளது. தமிழகத்தில் திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளது. கனரக மின் சாதனங்கள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பெல் நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 354 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
பட்டதாரி அப்ரெண்டீஸ் - 80
டெக்னிக்கல் அப்ரெண்டீஸ் - 57
ஐடிஐ அப்ரெண்டீஸ் - 217
கல்வித் தகுதி:
பட்டதாரி அப்ரெண்டீஸ் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
டெக்னிஷியன் அப்ரெண்டீஸ் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம். 2020 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
டிரேடு அப்ரெண்டீஸ் பணிக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட் ஆகிய பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
பட்டதாரி அப்ரெண்டீஸ் - 12,000
டெக்னிஷியன் அப்ரெண்டீஸ் - 11,000
டிரேடு அப்ரெண்டீஸ் - 11,050
ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்வது அவசியம்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வர்கள் https://nats.education.gov.in/ என்ற இணியதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://trichy.bhel.com/tms/app_pro/Graduate%20Apprentice_2025(Batch3).pdf
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications