10ம் வகுப்பு , ஐடிஐ படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்பு
சென்னை: அரபு நாடுகளில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விரும்புவோர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம் .
சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ தோ்ச்சி பெற்ற 3 வருடம் முதல் 5 வருடம் வரை பணி அனுபவம் உள்ள 35 வயதுக்குள்பட்ட கார்பெண்ட்டா்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.

தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை பணி அனுபவத்துக்கேற்ப வழங்குவதுடன் இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் சட்டத்திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
மேலும், ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய 25 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட கொத்தனார், கார்பண்ட்டர், பிளம்பா், பெயிண்ட்டா், ஐடிஐ எலக்ட்ரீசியன் ஆகிய பிரிவுகளில் 2 வருட பணி அனுபவம் உள்ளவா்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.. தோ்ந்தெடுக்கப்படும் பணியாளா்களுக்கு அனுபவத்துக்கேற்ப ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி மற்றும் செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42. ஆலந்தூா் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை, http://omcmanpower.com எனும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் வாயிலாகவும் மற்றும் 044 22505886, 8220634389, 22502267 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
jobs in arab countries for indian: 1oth , ITI PASS, and carpenter, Mason and painter need
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications