பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி ஆகணுமா? 146 பணியிடங்கள்! லட்சங்களில் சம்பளம்! யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் 146 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? வயது வரம்பு ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. தமிழகத்திலும் ஏராளமான வங்கி கிளைகளுடன் இந்த வங்கி இயங்கி வருகிறது. பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

jobs-in-bank-of-baroda-146-relationship-manager-posts-who-can-apply-check-details-here

பணியிடங்கள் விவரம்:

* துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் (DDBA) - 01
* தனி வங்கியாளர் - ரேடியன்ஸ் தனியார் - 03
* குழு தலைமை - 04
* பிராந்தியத் தலைவர் - 17
* சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர் - 101
* வெல்த் ஸ்டேட்டர்ஜி நிபுணர் (முதலீடு மற்றும் காப்பீடு) - 18
* புராடெக்ட் ஹெட் - பிரைவேட் பேங்க்கிங் - 01
* போர்ட்ஃபோலியோ ரிசர்ச் அனலிஸ்ட் - 01 என மொத்தம் 146 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தனி வங்கியாளர், குழு தலைமை, ரீஜினல் ஹெட், ரிலேஷன்ஷிப் மேனேஜர், வெல்த் ஸ்டேட்டர்ஜி நிபுணர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மேனேஜ்மெண்ட் பிரிவில் டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பு முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பணியிடங்கள் அனைத்திற்கும் குறைந்தது 1 ஆண்டு முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு

* துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர் (DDBA) - அதிகபட்ச வயது வரம்பு - 57
* தனி வங்கியாளர் - 33 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
* குழுத் தலைவர் - 31 முதல் 45 வயது வரை
* பிராந்தியத் தலைவர் - 27 முதல் 40 வயது வரை
* சீனியர் ரிலேஷன்சிப் மேனேஜர் - 24 வயது முதல் 35 வரை
* வெல்த் ஸ்டேட்டர்ஜி நிபுணர் (முதலீடு மற்றும் காப்பீடு) - 24 முதல் 45 வயது வரை
* புராடெக்ட் ஹெட் - பிரைவேட் பேங்க்கிங் - 24 முதல் 45 வயது வரை
* போர்ட்ஃபோலியோ ரிசர்ச் அனலிஸ்ட் - 22 முதல் - 35 வயது வரை

சம்பளம் எவ்வளவு?

பணியிடங்களின் தன்மைக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும். சராசரியாக ஆண்டுக்கு 6 லட்சம் முதல் 25 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து முழு விவரங்களையும் படித்து தெரிந்து கொள்வது அவசியம்.

https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 ஆகும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2025

தேர்வு முறை:

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கல்வித் தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மும்பை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணி அம்ர்த்தப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-03/Advertisement-Contratual.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+