பொதுத்துறை வங்கியில் அதிகாரி ஆகணுமா? 518 பணியிடங்கள்.. நாளைதான் கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: எஸ்.பி.ஐ வங்கிக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளம் வரை வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா உள்ளது. குஜராத் மாநிலம் வதோராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. எஸ்.பி.ஐ வங்கிக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகவும் பேங்க் ஆப் பரோடா உள்ளது. தமிழகத்திலும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் கிளர்க் உள்ளிட்ட பணியிடங்கள் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. அது போக சில சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 518 ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (எஸ் ஓ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.
பணியிடங்கள் விவரம்: மொத்தம் 518 எஸ் ஒ எனப்படும் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சீனியர் மேனேஜர் 10 பணியிடங்கள், மேனேஜர் 27 பணியிடங்கள், ஆபிசர் 10 பணியிடங்கள், மேனேஜர் ஏஐ என்ஜினியர் 10 பணியிடங்கள் என நாடு முழுவதும் மொத்தம் 518 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: பி இ / பிடெக், எம்பிஏ, எம்.சி.ஏ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதியுடன் அனுபவமும் கோரப்பட்டுள்ளது. துறைசார்ந்த பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். பணியிடங்கள் மற்றும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 22 வயது முதல் 37 வயது நிரம்பியவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ் சி எஸ் டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும். குறைந்தபட்சம் ரூ.48,480- முதல் அதிகபட்சமாக ரூ.1,20,940 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஆன்லைன் டெஸ்ட் வைக்கப்படும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 600 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை 11.03.2025 தான் கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்க நாளை ஒருநாள் மட்டுமே உள்ளதால் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க Click Here












Click it and Unblock the Notifications