School job: மத்திய அரசு பள்ளிகளில் வேலை.. 14,967 பணியிடங்கள்.. 10ம் வகுப்பு முடிச்சவங்க கூட விண்ணப்பிக்கலாம்
சென்னை: கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத (School job) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 14,967 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை குறைந்தது ரூ.18 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.
கேந்திரிய வித்யாலயா என்பது மத்திய அரசு பள்ளியாகும். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

14967 பணியிடங்கள்
கேவிபி என அழைக்கப்படும் இந்த கேந்திரிய வித்யாலயா மத்திய அரசு கீழ் வருவதால் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (PF), பயணப்படி (TA/DA) என பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. பணி பாதுகாப்பும் கிடைக்கும் என்பதால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணிபுரிய வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் லட்சியமாக உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 14,967 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* உதவி ஆணையர் (குரூப்-A): 08 பணியிடங்கள்
* உதவி ஆணையர் (கல்வி - குரூப்-A): 09 பணியிடங்கள்
* முதல்வர் (குரூப்-A): - 134 பணியிடங்கள்
* துணை முதல்வர்: 58 இடங்கள்
* முதுகலை ஆசிரியர்கள் (PGT): 1415 பணியிடங்கள்
* பட்டதாரி ஆசிரியர்கள் (TGT): 2764 பணியிடங்கள்
* முதல்நிலை ஆசிரியர்கள் (PRT): 3365 பணியிடங்கள்
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்:
நூலகர்: 147 இடங்கள், நிர்வாக அதிகாரி - 12, நிதி அதிகாரி - 05, உதவிப் பொறியாளர் - 02, உதவி பிரிவு அதிகாரி - 74, இளநிலை மொழிபெயர்ப்பாளர் - 08, மூத்த செயலக உதவியாளர் - 280, இளநிலை செயலக உதவியாளர் - 714, சுருக்கெழுத்தர் நிலை I - 03, சுருக்கெழுத்தர் நிலை II - 57 இடங்கள்.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். எனினும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள், 12 ஆம் வகுப்பு, டிகிரி, பிஎட், முதுகலை பட்டம் படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* உதவி ஆணையர் (குரூப்-A): 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
* உதவி ஆணையர் (கல்வி - குரூப்-A): 50 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* முதுகலை ஆசிரியர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* பட்டதாரி ஆசிரியர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
* முதல்நிலை ஆசிரியர்கள் 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பில் தளர்வுகள்:
அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள். மாற்றுத்திறனாளி (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள், மாற்றுத்திறனாளி (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
உதவி ஆணையர் (குரூப்-A): நிலை-12, ரூ.78,800 - ரூ.2,09,200.
முதுகலை ஆசிரியர்கள் (PGT): நிலை-8, ரூ.47,600 - ரூ.1,51,100.
பட்டதாரி ஆசிரியர்கள் (TGT): நிலை-7, ரூ.44,900 - ரூ.1,42,400.
நூலகர்: நிலை-7, ரூ.44,900 - ரூ.1,42,400.
முதல்நிலை ஆசிரியர்கள் (PRT): நிலை-6, ரூ.35,400 - ரூ.1,12,400.
நிர்வாக அதிகாரி: நிலை-10, ரூ.56,100 - ரூ.1,77,500.
இளநிலை மொழிபெயர்ப்பாளர் (JT): நிலை-6, ரூ.35,400 - ரூ.1,12,400.
மூத்த செயலக உதவியாளர்: நிலை-4, ரூ.25,500 - ரூ.81,100.
ஆய்வக உதவியாளர்: நிலை-1, ரூ.18,000 - ரூ.56,900.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கேந்திரிய வித்யாலயாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kvsangathan.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்பு விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தங்கள் தகுதியினை உறுதி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் 14.11.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள் 4.12.2025 ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்:
* உதவி ஆணையர், முதல்வர், துணை முதல்வர் பதவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.2,800 ஆகும். SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 ஆகும்.
* PGT, உதவிப் பொறியாளர், நிதி அதிகாரி, நிர்வாக அதிகாரி, TGT, நூலகர், PRT, உதவி பிரிவு அதிகாரி, இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிகளுக்கு ரூ.2,000 கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி என்றால் ரூ.500 செலுத்தினால் போதும்.
* உதவியாளர், சுருக்கெழுத்தர் நிலை-II, சுருக்கெழுத்தர் நிலை-I, இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், பல்துறைப் பணியாளர் பதவிகளுக்கு ரூ.1700 கட்டணம் ஆகும். SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி என்றால் ரூ.500 ஆகும். ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
https://cdnbbsr.s3waas.gov.in/s32d2ca7eedf739ef4c3800713ec482e1a/uploads/2025/11/2025111348.pdf












Click it and Unblock the Notifications