மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்.. சென்னையிலேயே பணியாற்றலாம்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய கிடங்கு கழகத்தில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவனம் மத்திய கிடங்கு கழகம். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மத்திய கிடங்கு கழகத்தில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? சம்பள விவரம் உள்ளிட்டவற்றை கீழே காணலாம்

பணியிடங்கள் விவரம்: உதவி என்ஜினியர் (சிவில்)- 18 பணியிடங்கள், உதவி என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) -5 பணியிடங்கள், அக்கவுண்டன்ட்- 24 பணியிடங்கள், கண்காணிப்பாளர் (பொது)-11 பணியிடங்கள், ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் -81 என மொத்தம் 139 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி என்ன?: உதவி என்ஜினியர் (சிவில்) பணியிடத்திற்கு சிவில் என்ஜினியரிங்கில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். உதவி என்ஜினியர் (எலக்ட்ரிகல்) பணியிடத்திற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம் அல்லது பிஏ (வணிகம்) அல்லது பட்டய கணக்காளர் உள்ளிட்ட பிரிவில் ஏதேனும் துறையில் கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம். கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு வேளாண்மை அல்லது உயிரியில், வேதியியல், பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: கணிணி வழியில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் 24.09.2023 ஆகும். தேர்வுக்கட்டணமாக பொது பிரிவினர் 1,450 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். நாடு முழுவதும் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்
சம்பளம் எவ்வளவு?: ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு மாதம் ரூ.29,000 முதல் 93,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் பணியமர்த்தப்படலாம். சென்னை, அம்பத்தூர், குரோம்பேட்டை, கோவை, தூத்துக்குடி, திருச்சி மாதவரம், நாகர்கோவில், உடுமைலைப்பேட்டை உள்ளிட்ட பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. தேர்வு குறித்த முழு அறிவிப்புகளை தெரிந்து கொள்ள https://cwceportal.com/Careers/Guidelines/11/11_R_4745_1692941703115_b378acb9-9516-46b7-941c-be766ec79440.pdf கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications