சென்னை மாநகராட்சியில் வேலை.. 8ஆம் வகுப்பு முடிச்சவங்களும் விண்ணப்பிக்கலாம்! தட்டி தூக்குங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு (Chennai Corporation Jobs) அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாப் நர்ஸ், சமூக பணியாளர், ஹாஸ்பிட்டல் பணியாளர், சூப்பர்வைசர் என பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 306 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள நர்ஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகர நல சங்கம் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனை, கலைஞரின் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கிண்டி மற்றும் தேசிய முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை கிண்டி மருத்துவமனை, மற்றும் பெருநகர மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு தேவையாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணியிடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

jobs-in-chennai-corporation-306-vacancies-check-eligible-details-and-how-to-apply

பணியிடங்கள் விவரம்:

* ஸ்டாப் நர்ஸ் - 288 காலிப் பணியிடங்கள்
* சமூக பணியாளர் (Psychiatric Social Worker) - 05
* சைக்காலஜிஸ்ட் - 01
* வேக்சின் கோல்ட் செயின் மேனேஜர் - 01

* சீனியர் ட்ரிட்மெண்ட் சூப்பர்வைசர் - 07
* புரோகிராம்-அட்மினிஸ்ட்ரேட்டிவ் அஸிஸ்டண்ட் - 01
* ஹாஸ்பிட்டல் பணியாளர் - 02
* பாதுகாவலர் - 01 என மொத்தம் 306 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

* நர்ஸ் பணியிடத்திற்கு DGNM அல்லது B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* சமூக பணியாளர் பணிக்கு சமூக பணி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* ஹாஸ்பிட்டல் பணியாளர், செக்யூரிட்டி ஸ்டாப் பணிக்கு 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?

* நர்ஸ் - ரூ.18,000/-
* சமூகப் பணியாளர் - ரூ.23,800/-
* உளவியலாளர் - ரூ.23,000/-
* தடுப்பூசி மேலாளர் - ரூ.23,000/-

* S.T.S (மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர்) - ரூ.19,800/-
* திட்டம் - நிர்வாக உதவியாளர் - ரூ.12,000/-
* மருத்துவமனை பணியாளர் - ரூ.8,500/-
* செக்யூரிட்டி ஸ்டாப் - ரூ.8,500/-

* இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டுதல்கள் பெருநகர மாநகராட்சியின் இணையதளமான https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பெறலாம். உரிய படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர்/செயலர்,
மாநகர அலுவலகர்,
மாநகர நல சங்கம்,
பொதுசுகாதாரத்துறை,
ரிப்பன் மாளிகை,
சென்னை - 600003

என்ற முகவரிக்கு 15.09.2025 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு உறுப்பினர் செயலர், மாநகர நல சங்கம், பொதுசுகாதாரத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை - 600003 அவர்களை 044-25619330, 044-25619209 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது நேரிலோ வேலை நாட்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+