சென்னை மாநகராட்சி சுகாதார மையங்களில் வேலை.. 140 பணியிடங்கள்.. 60 ஆயிரம் சம்பளம்! தேதி முடிய போகுது
சென்னை: சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடவும்.
சென்னை பெருநகர சுகாதார மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெடிக்கல் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ், பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள்... எனவே தகுதியும் ஆர்வமும் இருந்து விண்ணப்பிக்காத தேர்வர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். எப்படி விண்ணப்பிப்பது கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
மெடிக்கல் ஆபிசர் - 30 பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ் - 32
பல்நோக்கு சுகாதார பணியாளர் - 12
உதவி அலுவலர் - 66
என மொத்தம் 140 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: மெடிக்கல் ஆபிசர் பணியிடத்திற்கு எம்.பி.பி.எஸ் முடித்து இருக்க வேண்டும். ஸ்டாப் நர்ஸ் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங் / டிப்ளமோ நர்சிங் முடித்து இருக்க வேண்டும். நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வது அவசியம். பல்நோக்கு சுதாரா பணியாளர் பணிக்கு அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுகாதார ஆய்வாளர் பணி மற்றும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்புக்கான இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்து இருப்பது அவசியம். உதவி அலுவலர் பணிக்கு 8-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.
சம்பளம் எவ்வளவு:
மெடிக்கல் ஆபிசர் - 60 ஆயிரம் சம்பளம்
ஸ்டாப் நர்ஸ் - 18 ஆயிரம் சம்பளம்
பல்நோக்கு சுகாதார பணியாளர் - 14 ஆயிரம் சம்பளம்
உதவி அலுவலர் - 8,500 சம்பளம்
இந்த மூன்று பணியிடங்களுக்கும் 50 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தபால் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
Office of the Member Secretary,
CCUHM / City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation,
Ripon Buildings, Chennai - 3"
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.09.2024 ஆகும். வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application_UHWC.pdf கிளிக் செய்யவும்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. கலக்கத்தில் நகை பிரியர்கள்.. இன்றைய ரேட் என்ன? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications