இந்து அறநிலையத்துறை வேலை.. சென்னையில் பணியிடம்! 48 ஆயிரம் சம்பளம்.. தேதி முடியப்போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மதுரவாயலில் அருள்மிகு மார்க்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காவலாளி, மேளக்குழு, சுயம்பாகி உள்பட 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மாதம் ரூ.42,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் என்பதால், தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்தறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் சென்னை மதுரவாயலில் உள்ள அருள்மிகு மார்க்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள காவலாளி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

job jobs employment


பணியிடங்கள்: சுயம்பாகி -1, மேளக்குழு - 1, பகல் காவலாளி, இரவு காவலர் - 1, இரவு காவலர் -1 (வரசித்தி விநாயகர் திருக்கோயில்), திருவலகு -2 என மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். சுயம்பாகி பணியிடத்திற்கு திருக்கோயில் பழக்க வழக்கத்தின்படி தினசரி விழாக் காலங்களில் பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும். இதேபோன்று திருக் கோயில்களின் பூஜை முறைகளை பற்றி தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேளக் குழுவிற்கு அரசு அல்லது மத நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து உரிய சான்று பெற்றிருக்க வேண்டும். இதர விவரங்களை திருக்கோயில் அலுவலக நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு:
சுயம்பாகி: ரூ. 13,200 - 41,800
மேளக்குழு: ரூ.15,300 - 48,700
பகல் காவலாளி: ரூ.11,600 - 36,800
இரவு காவலர்: ரூ.11,600 - 36,800
இரவு காவலர்: ரூ.11,600 - 36,800
திருவலகு: - ரூ.10,000 - 31,500

எப்படி விண்ணப்பிப்பது?: இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல்- 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலேயே சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை மறுநாள் 27 ஆம் தேதி தான் கடைசி நாள் ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=208

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+