மேனேஜர் போஸ்ட்டுக்கு சென்னை மெட்ரோவில் வேலை ரெடி! மாதம் ரூ 1.60 லட்சம் வரை ஊதியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் உயர் பதவிகளுக்கு கை நிறைய சம்பளத்துடன் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்போர் ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்திற்கான விரைவான போக்குவரத்து அமைப்பாகும். இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ அமைப்பு சென்னையாகும். மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றின் நிதியுதவியுடன் இந்த மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

Jobs in Chennai Metro Rail Limited for good positions


அப்படிப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். உயர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் - உதவி பொது மேலாளர் (AGM)
காலிப்பணியிடம்- 1
ஊதியம் - மாதம் ரூ 1.60 லட்சம்
அனுபவம்: 17 ஆண்டுகள் பணி அனுபவம்
வயது வரம்பு : 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி- இளநிலை பொது மேலாளர் (JGM)
காலிப்பணியிடம் - 1
ஊதியம்- ரூ 1.45 லட்சம்
அனுபவம்: குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு- 43 க்குள் இருக்க வேண்டும்.

பணி- JGM (PS and OHE)
காலிப்பணியிடம்- 1
ஊதியம்- 1.45 லட்சம் ரூபாய்
அனுபவம்- குறைந்தது 15 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு- 43 வயதுக்குள் இருக்க வேண்டும்

பணி- மேலாளர் (ஆபரேஷன்)
காலிப்பணியிடங்கள்- 2
வயது வரம்பு - அதிகபட்சம் 38க்குள்ளும் இருக்க வேண்டும்
சம்பளம்- ரூ 85 ஆயிரம்
பணி அனுபவம்- குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம்

பணி- DM/AM (RS)
காலிப்பணியிடம்- 1
வயது வரம்பு - DM பணிக்கு 35 வயதுக்குள்ளும் AM பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்- ரூ 85 ஆயிரம்
பணி அனுபவம் - குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி- AM (GC)
காலிப்பணியிடம் - 2
வயது வரம்பு- அதிகபட்சம் 30
ஊதியம் ரூ 62 ஆயிரம்
அனுபவம்- குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம்

இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை- https://chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 24 ஆகும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://careers.chennaimetrorail.org

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+