சென்னை தாம்பரத்தில் பணியிடம்.. பெண்கள் உதவி மையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள பெண்கள் உதவி மையத்தில் பாதுகாவலர் உள்பட 5 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

job jobs employment

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, காவல்துறை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தெரிவித்துள்ளார்.

பணியிடங்கள் விவரம்:
1. வழக்கு பணியாளர் (Case worker) - 1
2. செக்யூரிட்டி கார்டு - 02
3. பல்நோக்கு பணியாளர் - 02
என மொத்தம் 5 இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

கல்வி தகுதி:
வழக்கு பணியாளர் பணிக்கு LL (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.
மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

* பாதுகாப்பாளர்: புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

* பன்முக உதவியாளர்: பன்முக உதவியாளர் பணிக்கு ஏதாவது அலுவலகத்தில் பராமரிப்பாளராக பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.

சம்பளம்: மேற்குறிப்பிட்ட மூன்று பணியிடங்களுமே ஒப்பந்தம் அடிப்படையிலானவை. வழக்கு பணியாளர் பணிக்கு ரூ.18 ஆயிரமும், பாதுகாவலர் பணிக்கு ரூ.12 ஆயிரமும், பன்முக உதவியாளர் பணிக்கு 10,000 வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தாம்பரம் சானடோரியத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மிகாதவராக இருத்தல் அவசியம். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 06.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை,
இராஜாஜி சாலை, சென்னை-01

[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கே விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/11/2024112220.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+