ரூ.40,000 சம்பளத்தில்! சொந்த ஊரிலேயே வேலை பார்க்க சான்ஸ்.. கோவை பொது சுகாதாரத்துறை சூப்பர் அறிவிப்பு
கோவை: கோயமுத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள நகர சுகாதார செவிலியர்கள், நுண்ணுயிரியலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கோயமுத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse), செவிலியர்கள் (Staff Nurse), மருந்தாளுநர்கள் (Pharmacist), நுண்ணுயிரியலாளர் (Microbiologist), ஆய்வகநுட்புநர் (Lab Technician) மற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multipurpose Health Worker), பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக (6 மாத காலத்திற்கு) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 30.04.2025 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை இங்கே காணலாம்.

பணியிடங்கள் விவரம்:
நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse)- 25
செவிலியர் பணியாளர்கள் - 02
மருந்தாளுநர்கள் - 02 என மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* செவிலியர் பணியிடங்களுக்கு பிஎஸ்சி நர்சிங், டிஜிஎன்எம் உள்ளிட்ட நர்சிங் சார்ந்த படிப்புகளை முடித்தவர்க்ள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்து இருக்க வேண்டும்.
* மருந்தாளுநர்கள்: பார்மசியில் டிப்ளமோ அல்லது டி பார்ம் முடித்து இருக்க வேண்டும். தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்து இருக்க வேண்டும்.
* நுண்ணுயிரியலாளர்: எம்.எஸ்.சி மெடிக்கல் மைக்ரோபயாலஜி, முதுகலை பட்டத்துடன் எம்பிபிஎஸ் முடித்தவர்கள், மைக்ரோபயாலஜி, வைராலஜி, பதோலாஜி மற்றும் பிற லே சயின்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்க்ள் விண்ணப்பிக்கலாம்.
* ஆய்வக நுட்பர் எனப்படும் லேப் டெக்னிஷியன் பணிக்கு அதே பாடப்பிரிவு கொண்ட டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
* பல்நோக்கு மருத்துவ பணியாளர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse) - ரூ. 14 ஆயிரம்
செவிலியர் பணியாளர்கள் - 18 ஆயிரம்
மருந்தாளுநர்கள் - ரூ.16,000
நுண்ணுயிரியலாளர் - ரூ. 40 ஆயிரம்
ஆய்வக நுட்பர் - ரூ.13 ஆயிரம்
பல்நோக்கு மருத்துவ பணியாளர் - ரூ.8,500
விண்னப்பதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பிற விவரங்கள்:
* இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் இணையும் போது பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) மற்றும் 6 மாத காலத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.
* தேவை ஏற்படின் தங்களுடனான ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்படும். மேற்கண்ட பணியிடங்கள் தேசிய சுகாதார குழுமத்தின் மூலம் நிரப்பப்படும்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தங்களுடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாநகரநல அலுவலர், பொது சுகாதாரப்பிரிவு, மாநகராட்சி பிரதான அலுவலகம் (டவுன்ஹால்), கோயம்புத்தூர் மாநகராட்சி, 1109, பெரிய கடைவீதி, கோயம்புத்தூர் - 641001.
குறிப்பு:-
1. விண்ணப்பங்கள் நேரிலோ /பதிவு தபால்/ விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கபடுகின்றன.
2. மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.
மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்போது கீழ்க்கண்ட ஆவணங்கள் கட்டாயம்
இணைக்கப்படவேண்டும்:-
3. விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்கவேண்டும். முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதிக்கான சான்று நகல் மற்றும் மதிப்பெண் சான்று நகல் சுயசான்றெப்பமிட்டு இருத்தல் வேண்டும்.
5. சாதி சான்றிதழ் நகல் சுயசான்றெப்பமிட்டு இருத்தல் வேண்டும்.
6. இருப்பிட சான்றிதழ் நகழ் (குடும்ப அட்டை/ஆதார் கார்டு அட்டை) சுயசான்றெப்பமிட்டு இருத்தல் வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ccmc.gov.in/img/upload/healthDepJob_2025.pdf


Click it and Unblock the Notifications
