சுகாதாரத்துறையில் வேலை! 89 பணியிடங்கள்! 8ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! எக்ஸாம் கிடையாது
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 89 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டி பார்ம், டிஜிஎன்எம் முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்களை காணலாம்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலச்சங்கம் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்தா பிரிவு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 89 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம், கல்வி தகுதி உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம் & சம்பளம்:
Special Educator for Behavior Therapy - ரூ.23,000/-
Occupational Therapists - ரூ.23,000/-
சமூக சேவகர் - ரூ.23,800/-
சமையல்காரர் - ரூ.8,500/-
அலுவலக உதவியாளர் - ரூ.13,000/-
மருத்துவமனை பணியாளர் - ரூ.8,500/-
சுகாதார பணியாளர் - ரூ.8,500/-
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW) - ரூ.8,500/-
துப்புரவு பணியாளர் - ரூ.8,500/-
ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு II - ரூ.13,000/-
வேன் ஓட்டுநர் - ரூ.1300/-
செமான்க் செக்யூரிட்டி - ரூ.8,500/-
பிசியோதெரபிஸ்ட் - ரூ.13,000/-
மருந்தாளுநர் (RBSK) - ரூ.15,000/-
MLHP – ரூ.18,000/-
சிகிச்சை உதவியாளர் (சித்தா-ஆண்) 15,000/-
மருந்து வழங்குபவர் (சித்தா) – ரூ.750/ நாள் (தினசரி ஊதியம்)
கல்வித் தகுதி: பணியின் தன்மைக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, டி பார்ம், டிஜிஎன்எம் முடித்தவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. வேன் டிரைவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம். பார்மசிஸ்ட் பணிக்கு பிளஸ் டூவுடன் டிபார்ம் முடித்து இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் மருத்துவமனை பணியாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். இந்த பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வித் தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்த பிறகு இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட நலவாழ்வு சங்கம் ( district health Society)
மாவட்ட சுகாதார அலுவலகம்,
பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி - 606 213
நிபந்தனைகள்:-
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபாலிலோ வரவேற்கப்படுகின்றது.
2. விண்ணப்ப படிவங்களை https://kallakurichi.nic.in/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 06.02.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவி[ப்பினை படிக்க: https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2025/01/2025012878.pdf
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications