தஞ்சாவூர் அரசு அலுவலகத்தில் பணி.. மாசம் பொறந்தா ரூ 10 ஆயிரம் சம்பளமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளர் தொழிற்பிரிவில் காலியாகவுள்ள இரு ஒப்பந்தப் பயிற்றுநர் பணியிடத்தை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ 10000 வழங்கப்படும். தஞ்சாவூரில் பணியமர்த்தப்படுவர்.

Jobs in Government Technical Institute for Instructor post in Tanjore office

இந்த பணிக்கான கல்வித் தகுதி அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினிரிங் பிரிவில் பட்டம் பெற்று ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினிரிங் பிரிவில் டிப்ளமோ படித்து இரு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் தொழில்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ், தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்று மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு ஜூலை 1, 2020 அன்று 18 வயது முடிந்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் துணை இயக்குநர்/ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர்- 613007 என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் மாலை 5.45 மணிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+