திருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்!
சென்னை: தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்ற இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர், அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை மின் பொறியாளர், பிளம்பர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அது போல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர், அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை மின் பொறியாளர், பிளம்பர் மற்றும் பல பதவிகளுக்கு காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி பிப்ரவரி 24 ஆம் தேதி. இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு ஆகிய அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மொத்தமுள்ள 63 இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 36 இடங்களும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 27 காலிப்பணியிடங்களும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு tnhrce.gov.in பார்வையிடலாம்.
வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்- 628215 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
அது போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் 623 526.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications