"அதெப்படிடா நான் கேப்டன் ஆன உடனே எல்லாரும் ஃபார்முக்கு வரீங்க" புலம்பும் ஸ்ரேயாஸ் ஐயர் மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யமான சம்பங்களையும், போட்டிக்கு பின்னான விமர்சனங்களையும் வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

memes

சம்திங் சம்திங் படத்தில் சந்தானம் கேசரி சாப்பிடும் அவரின் மாமாவிடம், "உப்புல கேசரி கொஞ்சம் கம்மில" என்று நக்கல் செய்வார். அதில் வரும் சந்தானமாக இந்திய ரசிகர்களையும், அவரின் மாமாவாக இந்திய அணியையும் மாற்றி, '300க்கு 43 ரன்கள் கம்மில' என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆளவிடுங்கடா கொய்யால ரகம்.

memes

பாய்ஸ் படத்தில் விவேக் அவரின் காதலியை, "அடியேய்.. அமெரிகா மாப்பிள்ளைனு போனியேடி.. அங்க அவன் கக்கூஸ் கழுவுறான்டி" என்பார். அதனை அப்படியே மாற்றி, "அடேய்.. கம்பீர் எரா.. மக்களின் கேப்டன்னு போனீங்களேடா.. அவன் கடைசில நம்ம இங்கிலாந்துல கக்கூஸ் கழுவ விட்டானேடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பிரிச்சு மேஞ்சுட்டாங்க ரகம்.

memes

முத்து படத்தில் பொன்னம்பலம் ரஜினியை பார்த்து, இப்படி அநியாயமா எங்க எஜமான கொலை பண்ணிட்டியேடா என்று பழிபோடுவார். அதில் வரும் பொன்னம்பலமாக ரசிகர்களையும், ரஜினியாக கம்பீரையும் மாற்றி, "இப்படி அநியாயமா கோச் ஆகி எங்க டீமை பீல் டவுன்ஃபாலுக்கு கொண்டு போய்ட்டியேடா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அவனை விடாதீங்க.. கேள்வி கேட்காம அடிங்கடா ரகம்.

memes

டுயூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன், எது பிரக்னன்ட்டா.. வயிறுல பெருசாகி உள்ள ஒரு குழந்தை இருக்குமே.. அந்த பிரக்னன்ட்டா என்று ஷாக்காவார். அதில் வரும் பிரதீப் ரங்கநாதனாக ஸ்ரேயாஸ் ஐயரை மாற்றி, நான் கேப்டன் ஆன பிறகுதான் ஃபார்ம்க்கு வருவீங்களாடா என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

memes

பாளையத்து அம்மன் படத்தில் சூனா பானா வடிவலுவுக்கு பயந்து, அந்த பூசாரி, அய்யா.. என்னோட ஆடு திருடு போகலை.. ஆடு திருடு போனது மாதிரி கனவு கண்டேன் என்பார். அதில் வரும் சூனா பானாவாக சுப்மன் கில்லையும், பூசாரியாக ஸ்ரேயாஸ் ஐயரையும் மாற்றி, அய்யா.. எனக்கு கேப்டன்சியே வேண்டாம்.. ஐபிஎல்ல மட்ட்யும் ஹுக்கும் பாட்ட போட்டு பொழப்ப ஓட்டுறேன்.. என்னை விட்டுருங்க என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தப்பிக்கவா பார்க்கிற.. பிடிங்கடா அவனை ரகம்.

memes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+