ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களா நீங்க.. மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் ஜாப்.. உடனே அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி என்ன, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பனவற்றை இங்கே காணலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் நிறுவனம் கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.

 Jobs in Hindustan Aeronautics Ltd Helicopter Factory in Tumakuru, 40 vacancy, how to apply

காலிப்பணியிடங்கள்: கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரங்களை பார்க்கலாம். பிட்டர் (17 பணியிடங்கள்) எலக்ட்ரிஷியன் (05 பணியிடங்கள்), ஸ்டோர்ஸ் கிளரிக்கல்/ கமர்ஷியல் அசிஸ்டண்ட்/ அட்மின் அஸ்சிஸ்டண்ட் (04 பணியிடங்கள்) , அக்கவுண்ட்ஸ் (02), சிவில் (01), டெக்னிஷியன் எலக்ட்ரிக்கல் ( 07), டெனிஷியன் (மெக்கானிக்கல்) (02), அஸ்சிஸ்டண்ட் (02 பணியிடங்கள்) என மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

கல்வி தகுதி: *ஃபிட்டர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் NAC (National Apprentice Certificate)(3 ஆண்டுகள்) அல்லது ஐடி (இரண்டு ஆண்டுகள்) உள்ளிட்ட கல்வி தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

*எலக்ட்ரிஷியன் - என்.ஏ.சி (3 years) அல்லது ITI (2 years) + NAC/NCTVT (1 year)

* ஸ்டோர்ஸ் கிளரிக்கல் / கமர்ஷியல் / அட்மின் அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து (BA/ B.Com/ B.Sc/ BBA/ BBM/ BCA/ BSW) ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்து இருக்க வேண்டும். அதுபோக டைப்பிங் /ஸ்டெனோகிராபி உள்ளிட்ட தொழில் நுட்ப அறிவும் அவசியம்.

*அக்கவுண்ட்ஸ்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பி.காம் பட்டப் படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

* சிவில்: டிப்ளமோ என்ஜினியரிங் (சிவில்) முடித்து இருக்க வேண்டும்.

*டெக்னிஷியன் (எலக்ட்ரிக்கல்) - பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ்& கம்யூனிகேஷன், எலக்டரிகல் & டெலி கம்யூனிகேஷன் ஆகிய ஏதேனும் ஒரு பாடபிரிவிவில் டிப்ளமோ என் ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும்.

* டெக்னிஷியன் (மெக்கனிக்கல்)- மெக்கானிக்கல் பிரிவில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.

*அஸ்சிஸ்டண்ட் (ஐடி) பணிக்கு 3 ஆண்டுகள் கொண்ட என்ஜினியரிங் டிப்ளமோ / டெக்னாலஜி(கம்ப்யுட்டர் / கம்ப்யூட்டர் சயின்ஸ்) முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகளும் வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஸ்கேல் C5 படி மாதம் ரூ.22 ஆயிரம் வழங்கப்படும். 4 ஆண்டுகள் பணிக்காலம் என்ற அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பபடுகிறது. பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 4 ஆண்டுகளில் தானாகவே பணிக்காலம் முடிந்து விடும்.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.emsecure.in/HAL-HR-23/ தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 24.09.2023 ஆகும். எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+