Jobs: கிராம வங்கிகளில் வேலை.. ஐபிபிஎஸ் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.. 13,217 பணியிடம்! தமிழ் நல்லா தெரியுமா?
சென்னை: ஐபிபிஎஸ் (Jobs in Bank IBPS) எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம், நாடு முழுக்க உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாள் உள்பட பல்வேறு பதவிகளில் பணியாளர்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 13,271 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள், ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக நிரப்பப்படுகின்றன. எஸ்பிஐ வங்கியை தவிர, இதர பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பெரும்பாலும் ஐபிபிஎஸ் வாயிலாகவே நிரப்பப்படுகின்றன.

இதனால், ஐபிபிஎஸ் வெளியிடும் தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஐபிபிஎஸ் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* அலுவலக உதவியாளர்கள் (மல்டி பர்ப்பஸ்) - 7,972
* அதிகாரி ஸ்கேல் I - 3,907
* அதிகாரி ஸ்கேல் II (பொது வங்கி அதிகாரி) - 854
* அதிகாரி ஸ்கேல் II (IT) - 87
* அதிகாரி ஸ்கேல் II (CA) - 69
* அதிகாரி ஸ்கேல் II (சட்டம்) - 48
* அதிகாரி ஸ்கேல் II (கருவூல மேலாளர்) - 16
* அதிகாரி ஸ்கேல் II (சந்தைப்படுத்தல் அதிகாரி - MO) - 15
* அதிகாரி ஸ்கேல் II (வேளாண் அதிகாரி) - 50
* அதிகாரி ஸ்கேல் III (மூத்த மேலாளர்) - 199
என மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்தும் கிராம வங்கிகளில் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் தமிழக கிராம வங்கியில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
தமிழ் தெரிந்து இருக்க வேண்டும்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்நாட்டு மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. அதேபோல் அனுபவமும் கோரப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
* அலுவலக உதவியாளர் பணிக்கு: 18 முதல் 28 வயது வரை
* அதிகாரி ஸ்கேல் I: அதிகபட்சம் 30 வயது
* ஸ்கேல் II: 32 வயது
* ஸ்கேல் III: 40 வயது
அனைத்து பணியிடங்களுக்கும் அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு (அதிகாரி ஸ்கேல் I, II, III க்கு மட்டும்) அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
முதல் நிலை தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழகம்):
சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும். மெயின் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, வேலூர்
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொண்ட பின்பு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.175 ஆகும். மற்றவர்கள் ரூ.850 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இன்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025 ஆகும்.
* முதல் நிலை தேர்வு: நவம்பர் / டிசம்பர் 2025
* முதல் நிலை முடிவுகள்: டிசம்பர் / ஜனவரி 2026
* மெயின் தேர்வு: டிசம்பர் 2025 / ஜனவரி 2026
* நேர்முகத் தேர்வு: ஜனவரி / பிப்ரவரி 2026
* பணி நியமனம் (உத்தேசமாக): பிப்ரவரி அல்லது மார்ச் 2026
தேர்வர்கள் தேர்வு அறிவிப்பை படிக்க:
https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications