வருமான வரித்துறையில் வேலை! தமிழ்நாட்டிலேயே பணியிடம்.. 8ம் வகுப்பு தகுதி + 56900 சம்பளம்.. செம சான்ஸ்
சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறையில் 'கேண்டீன் அட்டண்டட்' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், இதற்கான கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறைக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. வருமான வரித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது வருமான வரித்துறையில் 'கேண்டீன் அட்டண்டட்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம் & கல்வித் தகுதி: வருமான வரித்துறையின் தமிழ்நாடு & புதுவை பிராந்தியம் தலைமை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 25 கேண்டீன் அட்டண்டட் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய குடிமகனாக இருப்பது அவசியம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18- வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அரசு ஊழியர்களுக்கு 40 வயது வரை உச்ச வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். இது பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம்: சம்பளத்தை பொறுத்தவரை 7-வது ஊதிய கமிஷன் பே லெவல் 1-ன் படி மாதம் ரூ. 18,000-56,900 வரை சம்பளம் கிடைக்கும்.
தேர்வு முறை: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது, எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் - 08.09.2024. விண்ணப்பிக்க கடைசி நாள் - 22.09.2024.
தேர்வு நடைபெறும் நாள்: 06.10.2024
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள: https://www.tnincometax.gov.in/












Click it and Unblock the Notifications