இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை.. டிகிரி முடிச்சிருக்கீங்களா.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் எக்ஸியூட்டிவ் பணியில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.
இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் வரும் Post துறையின் கீழ் வரும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனத்தில் 132 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சியூட்டிவ் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி என்ன?: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்ப தாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2023 ஆம் தேதியில் இருந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2023 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இது முழுவதும் ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். முதலில் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு செயல்பாடு அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் டெஸ்ட் மாற்றும் குரூப் டிஸ்கசன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணி அமர்த்தப்படும் இடங்கள் உள்ளிட்டவற்றை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் https://www.ippbonline.com/documents/31498/132994/1690280273565.07.2023.pdf செய்யவும்.தகுதியானவர்கள் IPPB அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com இல் ஆன்லைனில் 26.07.2023 முதல் 16.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications